Special Update on Valimai Movie

வலிமை படத்தில் 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தல அஜித் கையில் எடுத்துள்ள செண்டிமெணட் குறித்து தெரிய வந்துள்ளது.

Special Update on Valimai Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொரானா ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு மீண்டும் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பைக் ஸ்டன்ட் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது ஏற்பட்ட விபத்தில் தல அஜீத்துக்கு காயம் ஏற்பட்டது. இருப்பினும் இப்படத்தின் படப்பிடிப்புகளை திட்டமிட்டபடி முடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் காயத்தையும் பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்தார்.

இந்த நிலையில் தற்போது இப்படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது படத்தில் அம்மா-மகன் சென்டிமென்ட் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும், தாய்மையை போற்றும் வகையில் பாடல் ஒன்று இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த படத்தில் அஜித்தின் அம்மாவாக பழைய நடிகை சுமித்ரா நடிக்கிறார். இவர் வீரம் படத்தில் தமன்னாவின் அம்மாவாக நடித்திருந்தார்.

14 வருடங்களுக்கு முன்னர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான வரலாறு திரைப்படத்தில் தான் அஜித் அம்மா மகன் சென்டிமென்டில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.