இந்த வாரத்தோடு முடிவுக்கு வர உள்ள பாரதி கண்ணம்மா சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளார் பிரபல நடிகர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் இந்த வாரத்தோடு முடிவுக்கு வர உள்ளது.

பாரதி கண்ணம்மாவை தேடி வந்த இடத்தில் பழைய நினைவுகளை மறந்து பின்னர் கண்ணம்மாவின் உதவியால் மீண்டும் குணமடைந்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் பாரதி கண்ணம்மாவுக்கு திருமணம் நடக்க அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இவர்களின் திருமண வைபோக நிகழ்ச்சியில் நடிகர் ஆர்.ஜே பாலாஜி பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது நடிப்பில் வரும் மூன்றாம் தேதி வெளியாக உள்ள ரன் பேபி ரன் படத்தில் ப்ரோமோஷனுக்காக அவர் இந்த சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளார்.

அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலமான திருநங்கை போட்டியாளர் ஷிவினும் இந்த சீரியலில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.