Special Coffee For Cold
Special Coffee For Cold

Special Coffee For Cold :

அதிகப்படியான சளி, இருமலுக்கு இந்த காபியை குடியுங்கள்: சளி, இருமல் போயே போச்சு!!

☆ எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் இருமலை குணப்படுத்த சில பொருட்கள் உள்ளது. அவைகளை உங்கள் சமையலறையில் இருந்தே நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

☆ கடுமையான மற்றும் தீவிரமான இருமலை கட்டுப்படுத்த சில வீட்டு சிகிச்சைகள்.

☆ தேவையான பொருட்கள்:
சுக்கு: 50 கிராம்
மிளகு: 50 கிராம்
திப்பிலி: 50 கிராம்
தேன்: சிறிதளவு
நாட்டுச் சர்க்கரை அல்லது பனைவெல்லம்: தேவையான அளவு.

☆ செய்முறை:

மேலே சொல்லப்பட்ட மூன்று பொருட்களையும் சொல்லப்பட்ட அளவுகளில் எடுத்துக் கொண்டு நன்கு அரைத்து நைஸான பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியில் ஒரு கிராம் எடுத்து சுத்தமான தேன் கலந்து சாப்பிட்டு வர விரைவில் சளி, இருமல், கபக்கட்டு அகலும்.

☆ இப்படி அருந்துவது கடினம்
என்று நினைப்பவர்கள். சுக்குமல்லிக் காஃபீ போல, இந்தப் பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து, அதில் நாட்டுச் சர்க்கரை அல்லது பனை வெல்லம் கலந்து அருந்தலாம். .

☆ சுக்குமல்லியில் கொத்தமல்லி விதைகளைப் பயன்படுத்துவோம், திரிகடுகத்தில் திப்பிலி சேர்க்கிறோம் அவ்வளவு தான் வித்தியாசம்.

☆ இதில் திப்பிலி இருக்கிறதே அது மிளகைக் காட்டிலும் காரம் அதிகமானது. எனவே கார்ப்புச் சுவை வேண்டாம் என நினைப்பவர்கள் திப்பிலியின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். காய்ந்த இஞ்சி தான் சுக்கு.

☆ எனவே மூன்றையும் சில மணி நேரங்கள் வெயிலில் காய வைத்து, எடுத்து மிஷினில் அரைத்து, வைத்துக் கொண்டால் வீட்டில் யாருக்கெல்லாம் சளித்தொல்லை, இருமல், கபம் இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் திரிகடுக காஃபீ போட்டுக் கொடுத்து அருந்த வைத்து சளி தொல்லையிலிருந்து தப்பலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here