bus stand
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 10,940 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 8,310 பேருந்துகளும் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Special bus for deepavali and ayutha pooja functions – ஒவ்வொரு வருடமும் தீபாவளி மற்றும் ஆயுத பூஜை பண்டிகை வரும் போது சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதில் பெரும்பாலானோர் பேருந்தை தேர்ந்தெடுப்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றிய ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடந்தது. அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

4 நாட்கள் விடுமுறை என்பதால் ஆயுதபூஜைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் உட்பட 5 இடங்களிலிருந்து 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை 10,940 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல், தீபாவளி முடிந்து சென்னை திரும்பி வர 4,627 பேருந்துகள் இயக்கப்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் சானிட்டோரியம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், மாதவரம் என மொத்தம் 30 இடங்களில் முன்பதிவு மையங்கள் திறக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், www.tnstc.com, www.redbus.in, www.paytm.com, www.busindia.com ஆகிய இணைய தளங்களில் அரசு பேருந்துக்கான முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.