Speak with God :

🕉 நாம் இந்தப் பிறவியில் யாருக்கும் எந்தவித துன்பமும் செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால் நாம் படும் கஷ்டத்திற்கு அளவே இல்லாமல் மிகவும் துன்பப்பட்டு கொண்டிருப்போம்.

இதற்கு காரணம் என்னவென்று கேட்டால், நாம் முற்பிறவியில் செய்த பாவத்தின் பலனை இப்பிறவியில் அனுபவிக்கிறோம் என்பது தான் அர்த்தம்.

🕉 அப்படியானால் கஷ்டம் நிஜம் என்று ஆனபிறகு, கடவுளை வணங்குவது ஏன்? அதை அனுபவித்து விட்டு போய்விடுவோமே என்றால், கஷ்டத்தை தாங்கும் சக்தியில்லை.

வனிதா பற்றி பேசிய பாத்திமா பாபு, அரங்கம் அதிர்ந்த ரெஸ்பான்ஸ் – அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

🕉 நாம் இறைவனிடம் வேண்டும் போது இறைவனிடம் மனம் விட்டு பேசும் போது நம்முடைய துன்பங்கள் அனைத்தையும் தாங்கக்கூடிய சக்தி நமக்கு கிடைத்துவிடும்.
இதனை நீலகண்டதீக்ஷிதர் மூலமாக தெரிந்து கொள்வோம்

🕉 நீலகண்டதீட்சிதர், ஆனந்த ஸாகர ஸ்தவம் என்ற தனது நூலில், அவர், “”அம்மா மீனாட்சி, உன்னிடம் எதையும் சொல்லவே வேண்டாம். சகலமும் தெரிந்தவள் நீ. ஆனாலும் என்னுடைய மனதில் இருக்கும் துன்பங்களை உன்னிடம் சொல்லாவிட்டால் என் மனமே புண்ணாகி விடுவது போன்று தோன்றுகிறது.

🕉 வாய்விட்டுச் சொல்லிவிட்டாலோ தற்காலிகமாக ஒரு ஆறுதலாக, தெம்பாக இருக்கிறது. அதனாலேயே உனக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும் நான் என் குறைகளைச் சொல்கிறேன்,” என்கிறார்.

🕉 நாமும், நம் கஷ்டங்களை தெய்வத்திடம் முறையிட்டு மனதில் இருக்கும் பாரத்தைக் குறைப்போம். மனச்சாந்தி பெறுவோம். துன்பங்களை எதிர்கொள்ளும், தாங்கிக்கொள்ளும், மனவலிமையை பெறுவோம்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here