SPB Tested Corona Positive : சில நாட்களாக உடல்நிலை குறைவால் இருந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன், பரிசோதனைக்குப் பிறகு கொரோனா தோற்று உறுதியாகி உள்ளது.
இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி உட்பட 16 மொழிகளுக்கு 40 ஆயிரம் வரையிலான பாடல்களை பாடியுள்ளனர் பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி. பாலசுப்பிரமணியன்.
இவருக்கு பல்வேறு மாநிலங்களில் ஏராளமான பிலிம் ஃபேர் விருதுகளும் தேசிய அளவிலான ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் நாட்டின் மிகப்பெரிய உயரிய விருதான மத்திய அரசின் பத்மஸ்ரீ. பத்மபூஷன் போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”தனக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் கடந்த 3 நாட்களாக இருந்ததால் பரிசோதனைக்குப் பிறகு லேசான கொரோனா உறுதியாகி உள்ளது. நான் தற்போது சென்னையில் சூளைமேடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன்.
நான் நலமா உள்ளேன். எனவே என்னை நலம் விசாரிப்பதற்காக யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்” என்று அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
இவர் சமீபகாலமாகவே கொரோனா விழிப்புணர்வு பாடல்களை பாடி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#SPBalasubrahmanyam has been tested positive for COVID and appeals his fans and well-wishers not to call him enquiring his health, as he says ” I am fine, I will be fine”#spb pic.twitter.com/MCjjeJyFC7
— Soundar (@csrsrajan) August 5, 2020