கொரானா தொற்றிலிருந்து எஸ்பிபி அவர்கள் மீண்டு விட்டதாக சரண் தெரிவித்துள்ளார்.

SPB Recovered From Corona : இந்திய சினிமாவில் பின்னணி பாடகராக வலம் வருபவர் எஸ் பி பாலசுப்ரமணியம். இவர் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆரம்பத்தில் லேசான அறிகுறியுடன் இருந்த எஸ் பி பாலசுப்ரமணியம் அதன் பிறகு கடுமையாகப் பாதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமாக சென்று கொண்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து அவருக்கு உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் உடல் நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் ஏற்பட தொடங்கியது.

SPB உடல்நிலை எப்படி இருக்கு?? சரண் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல் – உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

இந்த நிலையில் தற்போது எடுக்கப்பட்ட கொரானா பரிசோதனையில் எஸ்பிபி அவர்களுக்கு கொரானா தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.

மேலும் நுரையீரல் தொற்று குறைந்து கொண்டே வருவதாக சரண் தெரிவித்துள்ளார். பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

எஸ்பிபி தான் பேச நினைப்பதை எழுதி காண்பிப்பதாகவும், ஐ-பேட் மூலமாக கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.