SPB Health Status Detail
SPB Health Status Detail

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ICU-ல் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்பிபி நிலை என்ன என்பது குறித்து அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

SPB Health Status Detail : தென்னிந்திய சினிமாவின் முன்னணி பின்னணி பாடகராக வலம் வருபவர் எஸ் பி பாலசுப்ரமணியம். இவர் கடந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

லேசான அறிவுரையோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் தான் நலமுடன் இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ICU-விற்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இதனால் ஒட்டுமொத்த இந்திய திரையுலகம் அதிர்ச்சி அடைந்தது. எஸ்பிபி விரைவில் பூரண குணம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என பலரும் இறைவனைப் பிரார்த்தித்து வந்தனர்.

மேலும் சமூக வலைதளங்களிலும் எஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டும் என பதிவிட்டு வந்தனர்.

பிரைன் ஸ்ட்ரோக்கால் அவதிப்பட்ட வந்த நடிகர் லோகேஷ்ன் லாக்டோன் தற்போதைய நிலை!!

இந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் எஸ்பிபியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு அவர் விரைவில் பூரண குணம் பெற வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

மேலும் நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்களின் பிரார்த்தனை வீண் போகவில்லை எனவும் எஸ் பி பி யின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஐசியூவில் இருக்கும் பாலசுப்பிரமணியம் தனது கட்டை விரலை உயர்த்தி காட்டிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/iactor_vijay/status/1294503073969135618?s=19
https://twitter.com/Mahendr19513368/status/1294492822481981440?s=19