SPB Health Status 31.08.20
SPB Health Status 31.08.20

பாடகர் எஸ் பி பி உடல் நிலையில் தற்போதைய நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

SPB Health Status 31.08.20 : இந்திய சினிமாவில் பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது இவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அந்த அறிக்கையில் எஸ்பிபி பாலசுப்ரமணியம் அவர்கள் தற்போது வரை வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் மயக்க நிலையிலிருந்து மீண்டு சிகிச்சைக்கும் நல்ல ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் எஸ்பிபியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெகு விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் எனவும் தொடர்ந்து இறைவனை பிரார்த்தித்து வருகின்றனர்.