SPB Health Status 01.09.20
SPB Health Status 01.09.20

SPB உடல்நிலை எப்படி இருக்கு என சரண் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார்.

SPB Health Status 01.09.20 : தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகரான எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவருக்கு உயிர் காக்கும் கருவிகளை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திடீரென நாளுக்கு நாள் எஸ் பி பி யின் உடல் நிலை மோசமடைந்து வந்த நிலையில் தற்போது அவருடைய உடல்நிலை முன்னேற்றம் கண்டு வருகிறது.

ICU-ல் உள்ள SPB-யின் தற்போதைய நிலை என்ன?? குடும்பத்தினர் வெளியிட்ட முக்கிய தகவல்

மருத்துவர்களுக்கு அவர் நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது எஸ்பிபி பாலசுப்ரமணியம் அவர்களின் மகனான சரண் நானும் என்னுடைய சகோதரியும் அப்பாவை நேரில் பார்த்தோம். அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருந்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

இதனால் எஸ்பிபி குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என காத்திருந்த பிரபலங்களும், ரசிகர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.