South Indian Actors Marriage Look Photos

திருமண மாப்பிள்ளை கெட்டப்பில் கலக்கும் தென்னிந்திய நடிகர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

South Indian Actors Marriage Look Photos : தற்போது பலருக்கு திருமணம் நடைபெறும் காலகட்டம். முகூர்த்த தினங்கள் நிறைந்த கார்த்திகை மாதம். பொதுவாகவே திருமணம் என்றால் மாப்பிள்ளைகள் கலக்கலாக தெரிய வேண்டும் என்பதற்காகவே உடைகளில் அதிக கவனம் செலுத்துவார்கள். அப்படியானவர்களுக்கு ஐடியா கொடுக்கும் வகையில் தென்னிந்திய நடிகர்களான அல்லு சிரிஷ், துல்கர் சல்மான் மற்றும் விஜய் தேவர்கொண்டா ஆகியோர்களின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.

அல்லு சிரிஷ் :

அல்லு சிரிஷ் அவர்கள் வெள்ளை நிற ஷெர்வானி உடன் வெள்ளை நிற சுடிதார் மற்றும் வெள்ளை நிற துப்பட்டாவுடன் செம கலக்கல் லுக்கில் உள்ளார். கூலர்ஸ் மற்றும் பிரவுன் கலர் ஷூவுடன் பக்காவான நோக்கில் இவர் நடத்தும் இல்ல போட்டோ ஷூட் திருமண மாப்பிள்ளைகளின் ரிசப்ஷன் லுக்கிற்கு கச்சிதமாக பொருந்தும்.

துல்கர் சல்மான் :

நாளை ‘ஆஷஸ்’ மேட்ச் : இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிப்பு

மெருன் கலர் சர்வாணி மற்றும் கோல்டன் கலர் பட்டன்களுடன் கூடிய வெள்ளைச் சுடிதாரில் தோற்றம் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. இதுவும் திருமண ரிசப்ஷன் வீட்டிற்கு செம கச்சிதமான காஸ்டியூம். கூட்டத்தில் அனைவரது கண்ணையும் கவரும் வகையில் இந்த லுக் நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Maanaadu OTT-யில் நல்ல லாபம் – K Rajan Bold Speech at Muddy Trailer Launch | HD

விஜய் தேவரகொண்டா :

பிங்க் நிற ஷெர்வானி உடன் வெள்ளை நிற சுடிதார் மற்றும் வெள்ளை நிற குர்தாவில் விஜய் தேவரகொண்டா இன் போட்டோஷூட் புகைப்படங்கள் செம பேஷன் லுக்காக உள்ளது. எவ்வளவு கூட்டத்தில் இருந்தாலும் தனி ஆளாக காட்டும் ஒரு மாஸான ஃபேஷன் லுக்காக இந்த போட்டோஷூட் உள்ளது. இதுவும் ரிசப்ஷனுக்கு இருக்கு செம கச்சிதமான லுக்காக இருக்கும்.