Soundarya Rajinikanth

Soundarya Rajinikanth : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்திற்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் வலம் வரத் தொடங்கியுள்ளன.

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். இவருக்கு இரண்டு மகள்கள். முதல் மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார்.

இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து பெற்று கொண்டார். அதன் பின்னர் அனிமேஷன், இயக்கம் என தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது சௌந்தர்யா முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சகோதரரான வணங்காமுடியின் மகன் விசாகன் என்பவரை காதலித்து வருகிறாராம்.

இதனையறிந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வைரலாகி வருகின்றன.

அதோடு மாப்பிள்ளை என கூறப்படும் விசாகன் என்பவரின் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனால் வைரலாகி வரும் இந்த தகவல்கள் அனைத்தும் உண்மை தானா? என்பது ரஜினிகாந்த் அல்லது சொந்தர்யா தரப்பில் இருந்தோ சரியான விளக்கம் வந்தால் தான் எதுவும் உறுதியாகும்.

Soundarya Rajinikanth

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.