நீச்சல் குளத்தில் குளியலா? என நெட்டிசன்கள் திட்ட தொடங்கியதால் தான் வெளியிட்ட புகைப்படத்தை நீக்கியுள்ளார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

Soundarya Rajinikanth Photo : இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவருக்கு சமீபத்தில் தான் இரண்டாவது திருமணம் நடைபெற்றது.

தன்னை இயக்கிய இயக்குனரையே சந்திக்க மறுத்த ரஜினி, எல்லாம் வார்த்தையால் வந்த வினை.!

ட்விட்டர் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய மகனுடன் சேர்ந்து குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

Soundarya Rajinikanth

அதனை பார்த்த ரசிகர்கள் தமிழகமே குடிக்க தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறது, உங்களுக்கு நீச்சல் குளத்தில் குளியல் கேக்குதா என விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

இதனால் சுதாரித்து கொண்ட சௌந்தர்யா உடனே அந்த புகைப்படத்தை டெலீட் செய்து விட்டு தண்ணீரை சேமியுங்கள் என ஒரு ட்வீட்டும் செய்து விட்டார்.

இருப்பினும் ரசிகர்கள் அந்த புகைப்படங்களை சமுக வளையதளங்களில் பரவ விட்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.