Soundarya Rajinikanth Donates to CM Fund

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொரோனா நிவாரண நிதியாக ஒரு கோடி அளித்ததாக தகவல் வெளியான நிலையில் அது தவறான தகவல் என்று தெரியவந்துள்ளது.

Soundarya Rajinikanth Donates to CM Fund : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதன் இரண்டாவது அலை பெரும் சேதாரத்தை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் கொரானா நிவாரண நிதிக்கு மக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனால் தொடர்ந்து பல திரையுலக பிரபலங்கள் நிதி வழங்கி வருகின்றனர்.அந்த வகையில் அஜித்குமார் 25 லட்சம் அளிக்க அது ரூபாய் 2.5 கோடி என சமூக வலைதளங்களை தவறாக தகவல் பரவியது. அதனைத் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு கோடி நிதியளித்ததாக தகவல் பரவியது.

ஆனால் உண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு கோடி அளிக்கவில்லை. அவருடைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்தின் மீண்டும் குளறுபடி.

ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவின் Apex Laboratory நிறுவனம் சார்பாக முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.

ரஜினிகாந்த் கொடுத்ததாக தகவல் பரவுகிறது. அது உண்மையில்லை என தெரிய வந்துள்ளது.