Soundarya Rajinikanth : சௌந்தர்யா ரஜினிகாந்த் தன்னுடைய திருமணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவிற்கே சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவருடைய இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு இரண்டாவது திருமணம் நடைபெற இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
ஆனால் ரஜினியின் குடும்பத்தில் இருந்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. அனைவருமே தொடர்ந்து மவுனம் காத்து வந்தனர்.
தற்போது முதல் முறையாக சௌந்தர்யா ரஜினிகாந்த் மவுனம் களைத்து தன்னுடைய திருமணம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.
அந்த டீவீட்டில் இன்னும் ஒரு வாரம். பெருமை கொள்ளும் தருணம் #VedVishaganSoundarya என்ற ஹேஸ்டேக்குடன் கூறியுள்ளார்.
இவருக்கும் விசாகனுக்கும் வரும் பிப்ரவரி 10-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இருவருக்குமே இது இரண்டாவது திருமணம். சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு வேத் என்ற மகன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
#OneWeekToGo #BrideMode #Blessed ???????????????????????????????????? #VedVishaganSoundarya #Family ❤️❤️❤️ pic.twitter.com/fJYkHp8J1l
— soundarya rajnikanth (@soundaryaarajni) February 4, 2019