இந்தியன் 3 பாகத்தை தள்ளி வைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் இந்தியன் 2. லைக்கா நிறுவனம் தயாரிப்பிலும் அனிருத் இசையமைப்பிலும் வெளியானது.
இதில் கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் பிரீத் சிங், எஸ் ஜே சூர்யா, ஜெகன், காஜல் அகர்வால் போன்ற போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்
ஆனால் இந்தப் படம் வெளியாகி மக்கள் மனதை கவரவில்லை என்றே சொல்லலாம். நெகட்டிவ் விமர்சனங்களை இந்தப் படம் அதிகமாக சந்தித்தது. மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த படம் ஏமாற்றத்தை கொடுத்தது.
இதனால் படக்குழு மூன்றாவது பாகத்தில் ஒரு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மூன்றாம் பாகத்தை பொங்கல் பண்டிகையில் வெளியிட பிளான் பண்ணி இருந்ததாகவும் ,இரண்டாம் பாகத்தில் ஏற்பட்ட சொதப்பலால் மூன்றாம் பாகத்தில் சில சீன்களை மாற்றப் போகிறார்களாம்.
மேலும் கமல் தக் லைஃப் படத்தில் பிசியாகவும், சங்கர் கிறிஸ்மஸ் நாளில் வெளியாக இருக்கும் கேம் சேஞ்சர் பட வேலைகளில் ஈடுபட்டுள்ளதாலும் இந்த படத்தின் வெளியீடு தள்ளி போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.