Thalaivar 168 Audio Launch
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் நடிக்க இருந்த வடிவேலுவின் வாய்ப்பு சூரியால் பறி போயுள்ளது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது தர்பார் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் அடுத்த மாதம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இதனையடுத்து ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.

இந்த படத்தில் சூரி காமெடி நடிகராக நடிக்க கமிட்டாகியுள்ளார். ஆனால் முதலில் இந்த படத்தில் காமெடி வேடத்தில் வடிவேலு தான் நடிக்க இருந்தாராம்.

ரஜினியின் ராணா திரைப்படம் வெளியான போது ராணாவாவது காணாவாவது என வடிவேலுக்கு கலாய்த்து பேசி இருந்தார். இதனால் ரஜினிக்கும் வடிவேலுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த வாய்ப்பை வடிவேலுவிடம் இருந்து பறி போனதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மை என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.