இரண்டு திரைப்படங்களும் வெற்றி பெற நடிகர் சூரி – கீர்த்தி சுரேஷ் பாசத்துடன் வாழ்த்துக்களை பரிமாறியுள்ள ட்விட்டர் பதிவுகள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி காமெடி நட்சத்திரமாக வலம் வருபவர் சூரி. இவர் தற்போது கதாநாயகனாக நடித்திருக்கும் விடுதலை திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்றைய தினம் வெளியானது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வசூல் ரீதியாகவும், விமர்சனம் மீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெலுங்கு இயக்குனர் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் நானி நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தசரா படத்திற்கு வாழ்த்து தெரிவித்து என் அன்பு தங்கச்சி கீர்த்தி, நானி மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட, அதற்கு கீர்த்தி என் அன்பு அண்ணனின் விடுதலை திரைப்படம் வெற்றிபெற உங்கள் அன்பு தங்கையின் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று ரீ-ட்வீட் செய்துள்ளார். இப்படி இருவரும் மாறி மாறி அன்புடன் பகிர்ந்து இருக்கும் பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.