நடிகர் சூரி இல்லத் திருமண விழா நகை திருட்டு விவகாரத்தில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Soori Home Marriage Theft : மதுரையைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் சூரி அவர்களின் இல்லத் திருமண விழா கடந்த 9ஆம் தேதி மதுரை சிந்தாமணி பகுதியில் இருக்கக்கூடிய பிரபல தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அவங்க ஆட்டத்தை பார்க்க ஆர்வமா இருக்கேன் : காத்திருக்கிறார் கோலி

நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் நகை திருட்டு விவகாரம் : வாலிபர் கைது 10 சவரன் நகை மீட்பு

கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற இந்த விழாவில் தமிழகம் முழுவதும் உள்ள முக்கியமான சில பிரமுகர்களும் திரை பிரபலங்களும் பங்கேற்றனர். இந்த நிலையில் மணமகளின் உறவினர் மணமகளுக்கு பரிசாக வழங்க வைத்திருந்த சுமார் 10 சவரன் நகையை மணமகள் அறையில் இருந்து மர்மநபர்கள் திருடிச் சென்றதாக நடிகர் சூரியின் மேலாளர் சூரிய பிரகாஷ் கீரைத்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருமண மண்டபத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் திருமண நிகழ்ச்சியை பதிவு செய்யபட்ட வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த போது வாலிபர் ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் அங்கும் இங்கும் சுற்றியது பதிவாகி இருந்தது. அதனை அடிப்படையாக கொண்டு காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் பரமக்குடியை சேர்ந்த விக்னேஷ் என்பதும் அவர் நகை திருடியது தெரியவந்தது.

அனைவரையும் கலாய்த்து தள்ளிய தயாரிப்பாளர் Ravinder Chandrasekar!

அதனை தொடர்ந்து பரமக்குடியில் பதுங்கி இருந்த அவரை கைது செய்த கீரைத்துறை காவல்துறையினர் அவரிடம் இருந்து 10 சவரன் நகையை மீட்டு மதுரை அழைத்து வந்தனர். மேலும் இவர் மீது மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 18-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது, தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.