தன்னுடைய சார்பாக ரூபாய் 10 லட்சமும் மகன் மற்றும் மகள் சார்பாக ஒரு தொகையையும் கொரானா தடுப்பு பணிகளுக்காக அளித்துள்ளார் நடிகர் சூரி.

Soori Donates to CM Fund : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸில் இரண்டாவது அலை தமிழகத்திலும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் தடுப்பு பணிகளுக்காக தாராளமாக நிதி அளிக்க வேண்டும் என முதல்வர் எம் கே ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

என் சார்பா 10 லட்சம்.. மகன் மகள் சார்பா இதை வச்சிகோங்க.. கொரோனா தடுப்பு பணிகளுக்காக சூரி கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா??

இதையடுத்து திரையுலகப் பிரபலங்கள் பலரும் நிதி அளித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் சூரி உதயநிதி ஸ்டாலினை சந்தித்து தன்னுடைய சார்பாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

மேலும் தன்னுடைய மகள் வெண்ணிலா மற்றும் மகன் சர்வான் சார்பாக ரூபாய் 25 ஆயிரம் ரொக்கப் பணமாக அளித்துள்ளார். மொத்தம் 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து பணிகளுக்காக அளித்த சூரிக்கு மக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.