Meena and Soori
மீனாவின் வீட்டை விலைக்கு வாங்கி விட்டதாக பரவிய தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார் சூரி.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் சூரி.

வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா சாப்பிட்டு பிரபலமான இவர் கிடுகிடுவென உச்சம் தொட்டார்.

மேலும் சினிமாவில் தான் சம்பாதித்த பணத்தை வைத்து மதுரையில் இரண்டு ஓட்டல்களை திறந்து விட்டார்.

இந்நிலையில் அடுத்த கட்டமாக சினிமா நடிகையான மீனாவிற்கு சொந்தமாக சாலி கிராமத்தில் உள்ள வீட்டை விற்க முன்வந்ததும் பலரும் அந்த வீட்டை வாங்க போட்டா போட்டி போட்டுள்ளனர்.

ஆனால் அனைவரையும் சூரி பின்னுக்கு தள்ளி ரூ 6.5 கோடிக்கு விலைக்கு வாங்கி விட்டதாக கூறப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது இது குறித்து பேசியுள்ள சூரி நான் மீனா அவர்களின் வீட்டை எல்லாம் வாங்கவில்லை. பரவி வருவது வெறும் வதந்தி தான் என பதிலளித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.