ஜெய்பீம் படத்துக்கு விருது கிடைத்தால் அது அந்த விருதுக்கு தான் பெருமை என புகழ்ந்து தள்ளியுள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.

Soori About JaiBhim Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். ‌ இந்தப் படம் ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என அனைவரது மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

சில நேரங்களில், இது பிரச்சினையாக இருக்கிறது : ரோகித் சர்மா

No

படத்தில் நடித்த அனைவரது நடிப்பும் சிறப்பாக இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சூரி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஜெய்பீம் படத்தை பாதி பார்க்கலாம் மீதியை விடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தான் பார்க்க தொடங்கினேன். ஆனால் முழு படத்தையும் பார்க்க வைத்துவிட்டது.

Annaatthe VS Enemy : Public Review | Rajinikanth, Vishal, Arya, Nayanthara

இந்த படத்தில் நடித்த அவர்களுக்கு விருது கிடைத்தால் அது விருதுக்கு தான் பெருமை என அவர் பதிவு செய்துள்ளார். ‌‌ நடிகர் சூரியின் இதை பதிவு சூர்யா ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை பெற்று வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.