Soori about Battery The Movie
Soori about Battery The Movie

டிரைலர் ஈடுபாட்டுடனும், பிடிப்புடனும் இருக்கிறது. ஒரு நல்ல படத்தில் இருந்து தான் இதுபோன்ற டிரைலர் வரும் இப்படத்தைப் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன் – இயக்குனர் வெற்றிமாறன்

ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிப்பில் மணிபாரதி இயக்க, செங்குட்டுவன், அம்மு அபிராமி நடித்து, சித்தார்த் விபின் இசையில் பேட்டரி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் நடிகர், நடிகைகள், தொழில்நட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது :

இயக்குனர் வெற்றிமாறன் பேசும்போது,

இப்படம் ஆரம்பித்ததில் இருந்து மணிபாரதியை தெரியும். இப்படத்தை முடித்து விட்டு பார்க்க சொன்னார். அந்த நேரத்தில் பார்க்க முடியவில்லை. அவர் கேட்டபோதே இப்படத்தை பார்த்திருந்தால் அவர் கூறியதுபோல இப்படம் வெளியாவதற்கு உதவி புரிந்திருப்பேன். ஆனால், இப்போது PVR வெளியிகிறார்கள். நான் வெளியிடுவதைவிட இப்படம் இப்போது பெரிய வெளியீடாக தான் இருக்கும். அது இப்படத்திற்கு நல்லது என்று தான் நினைக்கிறேன்.

இசையமைப்பாளருக்கு வாழ்த்துகள். டிரைலரைப் பார்க்கும் போது ஈடுபாட்டுடனும், பிடிப்புடனும் இருக்கிறது. ஒரு நல்ல படத்தில் இருந்து தான் இதுபோன்ற டிரைலர் வரும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. இப்படத்தைப் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன். இயக்குனர் மணிபாரதிக்கு சிறப்பான வாழ்த்துகள். இப்படம் வெற்றியடைய வாழ்த்துகள் என்றார்.

இந்த படம் பார்க்க நானே ரொம்ப ஆவலா இருக்கேன்! - Director Vetrimaaran Speech | Battery Trailer launch

“பேட்டரி” படம் திரில்லர் மாடல்..”

பாடலாசிரியர் நெல்லை ஜெயந்தா பேசும்போது,

ஹீரோ செங்குட்டுவனுக்கு புது ஹீரோ மாதிரி இல்லாமல் நடித்திருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர் என்கிற மகா கலைஞனை தமிழ் சினிமா சிறப்பாக பயன்படுத்த வேண்டும். அதாவது அழுவதற்குக் கூட தமிழ் பண்பாடு உண்டு. இப்படத்தில் அவர் அழும் காட்சியில் உருண்டு புரண்டு நடித்திருக்கிறார். நட்பு காரணமாகவே மணிபாரதி இப்படத்திற்கு பாடலாசிரியராக வாய்ப்பு கொடுத்திருக்கிறார் என்றார்.

பேட்டரி கண்டுபிடிக்கப்பட்டு 220 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், மோனிகா தான் பேட்டரி படத்திற்கு யூனிட். பேட்டரி படம் திரில்லர் மாடல் என்றார்.

இயக்குனர் பன்னீர் செல்வம் பேசும்போது,

இயக்குனர் மணிபாரதி எப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்கும் மனிதர். பட வாய்ப்பு இல்லையென்றாலும், பாடல் எழுதுவது, கதை எழுதுவது என்று சதா இயங்கிக் கொண்டே இருப்பார் என்றார்.

நடிகர் ராஜ் தீபக் ஷெட்டி பேசும்போது,

பேட்டரி எனக்கு முதல் தமிழ் படம். முழுவதும் சார்ஜில் இருக்கிறது. மேட் இன் சைனா இல்லை. மேட் இன் சென்னை பேட்டரி என்றார்.

வசனகர்த்தா ரவி வர்மன் பச்சையப்பன் பேசும்போது,

எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறோம். இப்படம் 2020 மார்ச் மாதமே வெளியாக வேண்டியது. ஆனால், கொரோனா காரணமாக இவ்வளவு நாட்கள் தள்ளிப் போய் விட்டது. இப்படத்தில் வரும் சில காட்சிகள் ஒரு படத்தில் வந்திருக்கிறது. ஆனால், அது யதார்த்தமாக நடந்தது தான் என்றார்.

நடிகர் மதன்பாப் பேசும்போது,

அனைத்து பெரிய இயக்குனர்களின் கதை டிஸ்கஷனிலும் இயக்குனர் மணிபாரதி இருப்பார். திரைப்படத்தைப் பொருத்தவரையில் சிறிய படம், பெரிய படம் என்று எதுவும் கிடையாது. பாகுபலி பிரமாண்டமாக ஓடியது போல, காக்கா முட்டையும் அமைதியாக வெற்றிபெற்றது. அதேபோல் இப்படமும் வெற்றி பெறும்.

இயக்குனர் வசந்தபாலன் பேசும்போது,

தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பது தான் சினிமாவின் விதி. புட் அண்ட் டிட் வார்த்தைகள் ஓடிடி யில் டிரெண்ட் ஆகியிருக்கிறது. மீண்டும் வெற்றிபெறுவது என்பது பெரிய விஷயம். ஆனால், மணிபாரதி திரைக்கதை, வசனங்களை நண்பர்களுக்கு பகிர்ந்தளித்ததில் இருந்தே அவர் மீண்டும் வெற்றிபெறுவார் என்று தெரிகிறது. அவருக்கு தன்னைப் பற்றிய சரியான புரிதல்தான் இதற்கு காரணம். ஒரு படத்திற்கு திரைக்கதைத் தான் முக்கியம். திரைப்படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது அருமை, வேற லெவல் என்ற.. வார்தைகள் 2 கிட்ஸ்களின் தரக மந்திரமாக உள்ளது.

நடிகர் நாகேந்திர பிரசாத் பேசும்போது

எங்கள் அப்பா (சுந்தரம் டான்ஸ் மாஸ்டரிடம்) உதவியாளராக இருந்தபோதே தெரியும். இப்படத்தைப் பற்றி கூறும்போது, இது மிகவும் சிறிய படம் என்றார். சிறிய படம், பெரிய படம் என்று சொல்லாதீர்கள். இப்படத்தின் ஒரு வரி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நான் நடிக்கிறேன் என்று கூறினேன். இப்படத்தின் கதையை நம்பி எடுத்திருக்கிறார். நிச்சயம் வெற்றியடையும் என்று நம்புகிறேன் என்றார்.

இயக்குனர் சரண் பேசும்போது,

இக்காலகட்டத்தில் திரைப்படத்தை எடுத்து வெளியாகுவது என்பது பெரிய டாஸ்க். உத்வேகத்தோடு வரும் தயாரிப்பாளர்களால் தான் தமிழ் சினிமா வாழ்ந்து கொண்டிருக்கிறது. மணிபாரதி வெயிலில் நின்றாலே போதும் சார்ஜ் ஆகிவிடுவார். ஆரம்ப காலத்தில் இருந்தே அவர் என்னுடைய நண்பர். நான் எப்பொழுது படம் இயக்கினாலும், அவரிடம் தான் கூறுவேன். நமக்குள் புகுந்து நாம் எப்படி யோசிப்போமா அதே மாதிரி யோசிப்பவர்கள் கிடைப்பது அரிது. அப்படிப்பட்டவர் தான் மணிபாரதி. எங்கள் ஜெனரேஷன்களில் வசந்த பாலன் போன்றோர்கள். அதன் பிறகு வெற்றிமாறன் வந்தார். ஆனால், 2010க்கு பிறகு அப்பாவின் பெயரை தன் பெயரின் பின்னால் சேர்த்திருக்கிறார்கள். இவர்கள் மூவரும் தான் இன்றைய தமிழ் சினிமாவை கையாளுகிறார்கள்.

மணிபாரதி அதை நேர்த்தியாக கையாண்டிருக்கிறார். இந்த படத்திற்கு ஏற்றவாறு தயாரிப்பாளரும் பட்ஜெட் ஒதுக்கியிருக்கிறார். செங்குட்டுவன் சோஷியல் மீடியாவில் டிரெண்டாக இருக்கிறார். அம்மு அபிராமி பல இடங்களில் நடிகை சரிதாவை நினைவுப் படுத்துகிறார். அவரை குட்டி சரிதா என்று கூறலாம்.

எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருக்கிறார். ஒரு படத்திலேயே பத்து படத்திற்கான வசனங்களைப் பேசி விடுவார். டப்பிங் வந்தால் அடுத்த டேக் போகாமல் பேசி விடுவார். கன்னட மொழி படமான கேஜிஎஃப் -ஐயும் வரவேற்கிறோம். விக்ரம் படத்தையும் நம்ம படம்ன்னு மார்தட்டி வரவேற்கிறோம். யார் வந்தாலும் அவர்களை ஆதரிக்கிறோம்.

அனைவரும் இப்படம் வெற்றி பெற உழைத்த அனைவரையும் வாழ்த்துகிறேன். அதேபோல, குறிப்பிட்ட விழாவிற்கு தான் வெற்றிமாறன் வருவார். இந்த விழாவிற்கு அவர் வந்ததே வெற்றிதான். சித்தார்த் விபின் வித்தியாசமாக இசையமைத்திருக்கிறார்.

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசும்போது,

மணிபாரதி சாரைப் பற்றி கூறவேண்டுமானால், நாங்கள் சாலையில் சந்தித்து பேசுவோம், அடிக்கடி போன் செய்து கதை கூறுவார். ஒருநாள் நான் ஒரு படம் இயக்கப் போகிறேன். உங்களுக்கு சிறந்த கதாபாத்திரம் இருக்கிறது. கண்டிப்பாக அழைக்கிறேன் என்றார். அதன்படி அழைத்தார். நானும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று பணியாற்றியிருக்கிறேன் என்றார்.

இசையமைப்பாளர் சித்தார்த் விபின் பேசும்போது,

மணிபாரதி சாரும், சம்பத் சாரும், பேட்டரி படத்தைப் பற்றி கூறி, வாய்ப்புக் கொடுத்தார்கள். மணிபாரதி சாருடன் பணியாற்றும் போது மிகவும் ஆர்வமாக இருக்கும். இதயப்பூர்வமாக பணியாற்றும் அனுபவம் கிடைக்கும். அம்மு அபிராமி சிறப்பாக நடித்திருக்கிறார் என்றார்.

இயக்குனர் பிருந்தா சாரதி பேசும்போது,

இப்படம் வெளியாகி எப்படி ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை இந்த அரங்கம் உணர்த்துகிறது. பாலுமகேந்திரா மற்றும் பாலசந்தர் அவர்களின் ரசிகர் மணிபாரதி. இன்றும் அவர்களின் மூன்றாம் பிறை மற்றும் அரங்கேற்றம் படங்களைப் பார்த்துவிட்டு பேசிக் கொண்டிருக்கிறார். அவர் எப்போதும் நன்றி மறக்காதவர், அன்பானவர். குடும்பத்திற்கு வருமானம் கொடுக்க வேண்டிய காலகட்டத்தில் உதவி இயக்குனராக பணியாற்றுகிறோம். என்றாவது ஒருநாள் இயக்குனராகும் போது ஒரே நாளில் வாழ்க்கையே பெரிதாக மாறிவிடும். ஆனால், அதே இயக்குனர் தோல்வியடைந்து விட்டால், உதவி இயக்குனரைவிட மிகவும் மோசமான நிலைக்குச் செல்ல நேரிடும். ஆனால், மணிபாரதி துவழாமல் சின்னத்திரை, வார பத்திரிகை என்று ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

மணிபாரதியை நம்பி இப்படத்தைத் தயாரித்திருக்கும் தயாரிப்பாளருக்கு நன்றி. சரண் சார் கூறியதுபோல, இப்படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார். செங்குட்டுவனுக்கு இப்படம் வெற்றி படமாக இருக்கும்.

டைரக்டர் மோகன் ராஜா பேசும்போது,

கொரானாவிற்கு பிறகு இது தான் முதல் மேடை. 3 வருடங்களாக உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்காமல் வருத்தப்பட்டேன். கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஹைதராபாத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். நடிகர் சிரஞ்சீவையை இயக்கிக் கொண்டிருக்கிறேன்.

அனுபவம் எப்போதும் தோல்வியடையாது. அதுபோல, இப்படக் குழுவினர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள். இயக்குனர் மணிபாரதியால் தான் வேலைக்காரன் படத்தில் சினேகா பாத்திரம் உருவாகியது. அப்படத்தில் முழுக்க முழுக்க எனக்கு உறுதுணையாக இருந்தார்.

இளமை புதுமையைத் தரலாம் ஆனால், அனுபவம் தான் அழுத்தத்தைத் தரும். கொரோனா இன்னும் சவாலாக போய்க் கொண்டிருக்கும் காலத்தில், அனைவரும் திரையரங்கிற்கு வந்து படத்தைப் பார்க்க வேண்டும். கூட்டமாக வந்து திரையரங்கிற்கு வந்து ஊக்கவிக்க வேண்டும். மக்கள் பல படங்களை இது நன்றாக இருக்கும் என்று கணித்துக் கொண்டு போய், அது தவறாகப் போனதும் உண்டு. அதேபோல இப்படத்தையும் திரையரங்கிற்கு வந்து பாருங்கள் என்றார்.

நடிகை அம்மு அபிராமி பேசும்போது,

அசுரன் படத்தால் தான் இப்பட வாய்ப்புக் கிடைத்தது. ஆகையால், முதலில் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி. என்னைப் பாராட்டி பேசிய அனைவருக்கும் மிக்க நன்றி. குலுமணாலியில் புடவை கட்டி நடனமாட வேண்டும் என்கிற கனவு இப்படத்தில் நனவானது. மணிபாரதி சாரிடம் அனைவரிடமும் அன்பாகவும், அனுசரித்து போக வேண்டும் என்பதையும் அவரிடம் கற்றுக் கொண்டேன்.

அசுரனால தான் இந்த படம் வாய்ப்பு கிடைச்சது😍 - CWC Fame Ammu Abhirami Cute Speech😍

இப்படம் சொல்ல வேண்டிய கதை என்றார்.

“இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான படம்.” நடிகர் சூரி பேசும்போது,

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்த லிங்குசாமி சாருக்கு நன்றி. தான் வெற்றியடைவது மட்டுமல்லாமல் தன்னுடன் அசோசியேட்டாக இருப்பவர்களும் வெற்றியடைய வேண்டும் என்று நினைக்கும் பெரிய மனது கொண்டவர். மணிபாரதி அண்ணன் அழைக்கும்போது நான் இந்த படத்திலும் நடிக்கவில்லை, இப்படத்தைப் பற்றி எதுவும் தெரியாது. ஆகையால் என்ன பேசுவது என்று கேட்டேன். இப்படத்தின் கதையை இயக்குனர் மணிபாரதி கூறும்போது, இதுமாதிரியெல்லாம் இப்போது நடக்கிறதா? என்று கேட்டேன். ஆமாம் தம்பி என்றார். அவர் கதை கூறிய விதத்தைக் கேட்டு எனது கை மட்டும் நீளமாக இருந்திருந்தால் அங்கிருந்தே அவரை கட்டியணைத்திருப்பேன். ஒரு உயிருக்கு பிரச்சனை என்றால் கண்டிப்பாக காப்பாற்ற வேண்டும். அப்பா, அம்மா தம்பி என்று அவர்களுக்கு உயிர் போகும் அளவிற்கு பிரச்சனை என்றால் தவித்துவிடுவோம். ஒரு மனிதன் என்றைக்கு வேண்டுமானால் இறந்துவிடுவான். அந்த சூழ்நிலையில், ஒன்று கடவுளிடம் நிற்பான், இன்னொன்று மருத்துவரிடம் நிற்பான். அதுதான் உண்மை.அப்படி இருக்கும் பட்சத்தில் சில மருத்துவ கும்பல், நம்முடைய பாசத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறது. அதற்கு தீர்வு கொடுக்கும் படமாக இது இருக்கும். இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான படம்.

இன்று இருக்கும் காலகட்டத்தில் எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் கலாயிக்கிறார்கள். அதேபோல், முழு படத்தையும் ஈடுபாட்டோடு பார்ப்பதில்லை. பெரிய இயக்குனர்களின் படங்களை அனைவரும் சுலபமாக பார்க்கிறார்கள். ஆனால், புது நடிகர்கள், இயக்குனர்களின் படங்களைப் பார்ப்பதற்கு தயங்குகிறார்கள். ஆனால், அனைவரும் இப்படத்தை பார்க்க வேண்டும்.

எவ்வளவு வசனங்கள் கொடுத்தாலும் போதாது என்று கூறும் மனிதர் எம்.எஸ்.பாஸ்கர். அதேபோல், அனைவருடைய வசனங்களையும் இவரே பேசிவிடுவார். இசையமைப்பாளர் சித்தார்த் விபின் ஸ்டூடியோவிற்கு வரும்போது கண்களில் படுவது, கைகளில் கிடைப்பது என்று எல்லாவற்றையும் எடுத்து வந்து இசையமைக்கும் வல்லமைப் படைத்தவர்.

ஒரு படம் பாக்க வைக்குறது அவ்ளோ கஷ்டமா இருக்கு - Soori Ultimate Comedy Speech | Battery Audio Launch

இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.

கவிஞர் சினேகன் பேசும்போது,

சினிமாவில் முக்கியமான மூலதனம், காத்திருப்பும், நம்பிக்கையும். அது இயக்குனர் மணிபாரதியிடம் இருக்கிறது. இந்த மாதிரி படங்கள் வெற்றிபடங்கள் வெற்றியாகும் போது தான் சிறிய படங்கள் எடுப்பவர்களுக்கு ஊக்கமாக அமையும்.

இதுபோல நிறைய படங்கள் வரவேண்டும் என்றார்.

நடிகர் மாரிமுத்து பேசும்போது,

எனக்கும் மணிபாரதிக்கும் 34 வருட நட்பு. என் தம்பி அம்பத்தூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடன் மணிபாரதியும் வேலை பார்த்தார். அவர் பெயர் நாகை பொன்னி. அன்று முதல் இன்றுவரை போராடிக் கொண்டு தான் இருக்கிறார். சிறுகதை எழுதி கொண்டு இயங்கிக் கொண்டே இருக்கிறார். எனக்கு தெரிந்து மணிபாரதிக்கு இது நான்காவது படம் என்று நினைக்கிறேன். இப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்றார்.

தயாரிப்பாளர் மாதையன் இப்படம் வெற்றியடைய வாழ்த்துகள் என்றார்.

நடிகர் செங்குட்டுவன் பேசும்போது,

எந்த மேடையாக இருந்தாலும், நான் பேசும் முதல் மனிதர் என் அப்பா தான். என்னை இந்தத் துறையில் வெற்றியாளனாக உருவாக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார். கொரோனாவிற்கு பிறகு இத்தனை நாள் நாங்கள் இழுத்துப் பிடித்ததற்கு காரணம் திரையரங்கில் வெளியிட வேண்டும் என்று தான்.

இங்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கும் அனைத்து இயக்குனர்களுக்கும் நன்றி என்றார்.

மீண்டும் நல்ல சினிமா ஓடணும் - Bigg Boss Fame Snehan Speech | Battery Movie Audio Launch

இயக்குனர் மணிபாரதி பேசும்போது,

திரைச்சுவை என்னும் பத்திரிகையில் சப் எடிட்டராக பணியாற்றினேன். ரஜினி முதல் அனைவரையும் பேட்டி எடுத்திருக்கிறேன். ஜெயம் ராஜாவின் ரசிகன் நான். சிரஞ்சீவியை வைத்து படம் இயக்கி வருகிறார். தெலுங்கில் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளில் இப்படமும் இருக்கிறது. இப்பசம் வெற்றியடைய வாத்துக்கள். விழாவிற்கு வந்ததற்கு நன்றி.

இப்படத்தின் கதையை அம்மு அபிராமியின் அப்பாவிடம் கூறும்போது, அம்மு அபிராமி படத்தின் முழுக் கதையையும் கேட்டார். அம்மு அபிராமி அப்பாவிடம் நேரில் அழைத்து வாருங்கள் என்று கூறினேன். அவருடைய பாத்திரத்தைப் பற்றி 10 நிமிடங்கள் கூறினேன். அதன்பிறகு படத்தின் கதையைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட கேட்கவில்லை. அவருடைய நடிப்பை சரண் நடிகை சரிதாவுடன் ஒப்பிட்டார். நான் நடிகை ரேவதியுடன் ஒப்பிடுகிறேன். இயக்குனர் மாதையனுக்கு மிக்க நன்றி. அன்பே அன்பே படத்திற்கு நான் கேட்பதையெல்லாம் கொடுத்தார்கள். ஆனால், நான் தான் சரியாக எடுக்கவில்லை. ஆனால், மாதையன் சார் இந்த படத்திற்கு என்ன தேவையோ அதை செய்துக் கொடுத்தார். படம் முடிக்கும் வரை எந்தவிதத்தலும் தலையிடவில்லை.

நான் செய்த புண்ணியமோ அல்லது என் அப்பா அம்மா செய்து புண்ணியமோ தெரியவில்லை. இயக்குனர் வெற்றி மாறன், நடிகர் சூரி மற்றிம் பலரும் இங்கு வந்திருக்கிறார்கள்.

தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார். இந்த வருடத்தில் எத்தனை விருதுகள் வெல்ல போகிறார் என்று தெரியவில்லை.

நடிகர் செங்குட்டுவன் முதல் படத்திலேயே கூட்டத்தை சேர்த்து விட்டார். நடிப்புடன் தயாரிப்பு பணிகளையும் பார்த்துக் கொண்டார். இப்படத்திற்காக எதை செய்யலாம் என்று யோசனை கேட்டால், எது சிறந்ததோ அதைத்தான் தேர்வு செய்வார். அதுவே எனக்கு இப்படம் சிறப்பாக இயக்குவதற்கு உறுதுணையாக இருந்தது.

வெற்றிமாறனின் விடுதலை வெற்றியடைய வாழ்த்துகள் சார். ஜெமினியில் பணியாற்றியதால் அன்பே அன்பே படம் கிடைத்தது. சரண் சார் இப்போது ஒரு படம் இயக்கி வருகிறார். அப்படம் நிச்சயம் வெற்றியடையும். பன்னீர் செல்வமும் ஐஸ்வர்ய முருகன் என்ற படத்தை இயக்குகி இருக்குகிறார். வாரியார் படத்திற்கு பிறகு வெளியாகும்.

பிருந்தா சாரதி லிங்குசாமியின் ரன் படத்தைத் தவிர அனைத்து படங்களுக்கும் அவர் தான் வசனகர்த்தா. சாகித்ய அகாடமி விருது வாங்கும் தகுதி வாய்ந்தவர். வசந்தபாலனும் ஒரே இடத்தில் தான் தங்கியிருந்தோம். என்னைவிட பெரிய டைரக்டரை விழாவிற்கு கூப்பிட வேண்டியது தானே என்றார். வெயிலோ, அங்காடித் தெருவோ அவர்கள் எடுக்கவில்லையே என்றேன். உடனே வந்துவிட்டார். அநீதி என்று படம் இயக்கி வருகிறார்.வாழ்த்துக்கள் எம்.எஸ்.பாஸ்கர் வியந்து பார்க்கக் கூடிய நடிகர் அதில் எந்த சந்தேகமுமில்லை.

Hollywood-ல இப்படிதான் படம் எடுப்பாங்க! - Vasantha Balan Speech | Battery Movie Audio Launch

ஒளிப்பதிவாளர், சதுரங்கவேட்டைக்குப் பிறகு 10 படங்கள் முடித்துவிட்டார். இப்படத்திற்கு பாராட்டு வந்தால், அதற்கு அவரும் முக்கிய காரணம். கலாபவன் மணியை நானும் சரண் சாரும் தான் தமிழுக்குக் கூட்டி வந்தோம். நேரமில்லை என்று கூறியவர் ஜெமினிக்குப் பிறகு தமிழில் அதிக படங்கள் நடித்து, அதிகம் சம்பாதித்தார். இப்படத்தில் அறிமுகமாகியிருக்கும் கன்னட நடிகர் ராஜ் தீபக் செட்டி இவர் போல வருவார். சித்தார்த் விபின் சிறப்பான இசையமைத்திருக்கிறார். மதன்பாப் சார் எனக்காக ஒரு விளம்பர படம் நடித்துக் கொடுத்தார். இங்கு வந்ததிற்கு நன்றி.

கலை இயக்குனரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். சினேகன் சாரும் மிகவும் உறுதுணையாக இருந்தார். இப்படத்திற்கு சிறுமி கதாபாத்திரத்திற்காக தேடும்போது, கைதி படத்தில் நடித்த மோனிகாவை கேட்டோம். கதை பிடித்தால் தான் நடிப்போம் என்று அவர் அம்மா கூறினார். 1 மணி நேரம் கதை கேட்ட பிறகு ஒப்புக் கொண்டார்கள். படம் பார்த்துவிட்டு 1 மணி நேரம் பேசினார். அந்தளவிற்கு அவர்களுக்கு படம் பிடித்திருந்தது. மாரிமுத்து என்னுடைய சிறந்த நண்பர்.

நடிகர் சூரி சாருக்கு இரவு 11 மணிக்கு பேசினேன். வளர்ந்து வரும் பெரிய நடிகர் எனக்காக இங்கு வருவதற்கு பெரிய மனசு வேண்டும். நான், எஸ்.ஜே.சூர்யா, மாரிமுத்து நாங்கள் மூவரும் ஆசை படத்தில் பணியாற்றினோம். இப்படத்திற்காக டிவிட் செய்திருக்கிறார். அதேபோல சம்பத் மிக மிக உறுதுணையாக இப்படத்திற்கு என்ன தேவையோ அதை செய்து கொடுத்தார்.

இந்த விழா இவ்வளவு சிறப்பாக நடப்பதற்கு உறுதுணையாக இருந்த மக்கள் தொடர்பாளர் ஜான்சன் அவர்களுக்கு நன்றி.

விழாவின் இறுதியில், இப்படத்தின் குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இசைத்தட்டை வெளியிட்டார்கள்.

இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான படம் - நடிகர் சூரி பேச்சு