Soorarai Pottru Special Update
Soorarai Pottru Special Update

சூரரைப் போற்று படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

Soorarai Pottru Special Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று. இறுதிச்சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்க சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

ஏப்ரல் மாதம் இப்படம் கொரானா ஊரடங்கு காரணமாக தள்ளிப் போயுள்ளது. இந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு இப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

அதன்படி தற்போது சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ஆம் தேதி காலை 10 மணிக்கு காட்டுப் பயலே என்ற பாடலின் ஒரு நிமிட வீடியோ வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை ஆறு மணிக்கு மேல யாருக்கு போன் பண்ணாலும் அஜித் சொல்லும் முதல் வார்த்தை இது தானாம் – ஏன் தெரியுமா? பலருக்கும் தெரியாத ஸ்பெஷல் தகவல்.!

இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். காட்டுப் பயலே என்ற பாடலை கவிஞர் சினேகன் எழுதியிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இதனால் இப்பாடல் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எழுந்துள்ளது.

ஆனால் அளவுக்கதிகமாக எதிர் பார்த்த ரசிகர்கள் வெறும் நிமிட வீடியோ தான் வெளியாகுமா என அப்செட் ஆகி உள்ளனர்.

முழு பாடல் எப்போது வெளியாகும் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

https://twitter.com/Tharane_twetz/status/1284800997211037696?s=19
https://twitter.com/AswingSatheesh2/status/1284801990413828097?s=19