Soorarai Pottru Release in OTT
Soorarai Pottru Release in OTT

OTT-யில் சூரரைப் போற்று படம் ரிலீசாக உள்ளதாக வெளியான தகவல் குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

Soorarai Pottru Release in OTT : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா. இவரது நடிப்பில் சூரரைப்போற்று என்ற திரைப்படம் உருவாக்கியுள்ளது.

தமிழில் இறுதிச்சுற்று என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த சுதா கொங்கரா என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இப்படத்தின் சில பாடல்கள், டீஸர், டிரைலர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளன. ஒட்டுமொத்த சூர்யா ரசிகர்களும் படத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

வலிமை Vs அண்ணாத்த : அஜித்தின் மரண மாஸ் பிளான் இது தான் – லீக்கான ரகசியம்.!!

ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால் இந்த படத்தின் ரிலீஸ் சென்றது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

இதனால் படக்குழு OTT வழியாக இந்த படத்தை வெளியிடலாம் என முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் பரவியது. என்னது OTT ரிலீஸா என சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் படக்குழு தற்போது இந்த தகவல் உண்மை அல்ல முற்றிலும் வதந்தி என விளக்கம் அளித்துள்ளது. மேலும் இயல்பு நிலை திரும்பி திரையரங்குகள் திறக்கப்பட்டதும் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.