Soorarai Pottru BGM Video
Soorarai Pottru BGM Video

சூர்யாவின் சூரரைப்போற்று படத்தின் அமேசான் OTT ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Soorarai Pottru OTT Release Date : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. அஜித் விஜய்க்கு அடுத்தபடியாக தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகராக வலம் வருகிறார்.

இவரது நடிப்பில் இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இப்படம் உலகம் முழுவதும் ஏப்ரல் மாதமே வெளியாக இருந்தது.

அஜித்துடன் நடிக்கும் போது அவர் அவ்வளவு பெரிய நடிகர்னு தெரியாது, ஆனால்? – அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை!

ஆனால் அதிகரித்து வரும் குரானா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தியேட்டர்கள் மூடப்பட்டதால் இந்த படம் ரிலீஸ் தள்ளிப் போய் வருகிறது.

இதனால் அமேசான் ப்ரைம் நிறுவனம் நேரடியாக அவர்களின் இணையத்தில் OTT வழியாக வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி வந்தது.

ஆனால் சூர்யா இந்தப் படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

மக்களின் அச்சத்தைப் போக்க மாஸ்டர் படத்தை வைத்து தியேட்டர் உரிமையாளர்கள் போடும் பக்கா பிளான்!

இந்த நிலையில்தான் நேற்று இப்படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து படத்திற்கு யு ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலை தொடர்ந்து தற்போது இப்படம் தியேட்டரில் வெளியான பிறகு ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் என படக்கழுவினருடன் நட்பு வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

அதற்கு முன்னதாகவே தியேட்டர்கள் திறந்தவுடன் இப்படம் வெளியாகி விடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.