Soorarai Pottru Latest Update
Soorarai Pottru Latest Update

சூர்யாவின் சூரரைப்போற்று படம் பற்றி அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

Soorarai Pottru Latest Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று.

இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப் படத்தை 2D என்டர்டைன்மெண்ட் மற்றும் சக்தி பிலிம்ஸ் பேக்டரி நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படம் ஏப்ரல் மாதம் ரிலீசாக இருந்தது. ஆனால் பரவிவரும் கொரானா வைரஸ் தொற்று காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் ரிலீஸ் தள்ளிப்போனது.

நான்கு வருடத்திற்கு பிறகும் விஜய் படம் படைத்த பிரமாண்ட சாதனை – அதிகாரப்பூர்வமாக வெளியான அறிவிப்பு

மீண்டும் எப்போது தியேட்டர்கள் திறக்கப்படும் இந்த படம் ரிலீஸ் எப்போது என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது இப்படம் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால் சூர்யா ரசிகர்களுக்கு என்று உற்சாகமாகக் கொண்டாட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.