Soorarai Pottru Business
Soorarai Pottru Business

தற்போதைய சூழ்நிலையில் படம் ரிலீசாகுமா என்பது சந்தேகமாக இருக்கும் நிலையிலும் சூரரைப் போற்று படம் வியாபாரத்தில் மாஸ் காட்டியுள்ளது.

Soorarai Pottru Business : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று‌.

இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இப்படத்தை இயக்க ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படம் உலகம் முழுவதும் ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக இருந்தது.

ஆனால் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளிப் போய் வருகிறது.

வெறித்தனமான வசூல் வேட்டைக்கு தயாராகும் யாஷ்.. வெளியானது கே ஜி எஃப் 2 படத்தின் ரிலீஸ் தேதி!

இதனையடுத்து இப்படத்தை OTT வழியாக வெளியிட முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் படக்குழு நிச்சயம் சூரரைப்போற்று தியேட்டரில் தான் வெளியாகும் என உறுதி கூறியது. அதன் பின்னர் இப்படத்திற்கு யு ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

தியேட்டர் எப்போது திறக்கப்படும்? படம் எப்போது ரிலீசாகும்? என்பது இன்னும் தெளிவாக தெரியாத நிலையிலும் சூரரைப்போற்று திரைப்படம் 100 கோடிக்கு வியாபாரம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூபாய் 100 கோடிக்கு விற்பனையாகி இருப்பது திரையுலகினரை பிரமிக்க வைத்துள்ளது.