சூரரை போற்று செகண்ட் லுக் போஸ்டர் காப்பி என நெட்டிசன்கள் சிலர் கூறி போஸ்டர் ஒன்றையும் ஷேர் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் சுதா கொங்கராவ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சூரரை போற்று.
இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியானது. பறவையின் கழுத்தில் சூர்யாவின் முகம் தெரிவது போல இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டு இருந்தது.
இதே போல் பறவையை வைத்து கோஸ்ட் ஸ்டோரீஸ் என்ற பாலிவுட் வெப் சீரிஸ் தொடர் ஒன்று நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த போஸ்டரும் பறவையை வைத்து உருவாக்கப்பட்டு இருக்கவே அதன் காப்பி தான் இது என சிலர் கலாய்க்கின்றனர். ஆனால் உண்மையில் இரண்டும் வேறு வேறு தான்.
பறவை இருந்தால் ஒரே கதை, காப்பியா? நல்லா இருக்கு உங்க நியாயம் என்கின்றனர் சூர்யா ரசிகர்கள்.