முதன்முறையாக திரையரங்கில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Soorarai Potru Release in Theatre : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் சூரரை போற்று. இரு வருடங்களுக்கு முன்னர் இந்தப் படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோ வெளியானது. கொரோனா காரணமாக இந்த படம் திரையரங்குகளில் வெளியாக முடியாத சூழல் உருவானது.

மனிதரின் இயல்பை புரிந்து கொள்.!

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனாலும் படத்தை திரையரங்குகளில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என ஏங்கிய ரசிகர்கள் பலர் உண்டு. இந்த நிலையில் தற்போது இந்த படம் திரையரங்குகளில் முதன் முறையாக வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Vascodagama பட பூஜையில் தயாரிப்பாளர் காலில் விழுந்த நடிகர் Nakul | K.Rajan | HD

ஆனால் திரையரங்கில் தமிழகத்தில் வெளியாகவில்லை. கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபா திரையரங்கில் தான் இந்த படம் வெளியாகிறது. வரும் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கேரளாவில் உள்ள சூர்யா ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.

தளபதி விஜய் போல சூர்யாவுக்கும் தமிழகத்தில் தாண்டி கேரளா ஆந்திராவில் நல்ல ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.