சூரரை போற்று விமர்சனம்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்த விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

சூரரை போற்று விமர்சனம் : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் தான் சூரரை போற்று. இந்தத் திரைப்படம் இன்று அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாகியுள்ளது.

படத்தின் கதை :

நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள சூர்யா ஒரு தனி ஏர்லைன்ஸ் நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என ஆசை கொள்கிறார். சிறு வயதிலிருந்தே இவருக்கு இந்த ஆசை இருந்து வருகிறது.

பலர் அதெல்லாம் நடக்கிற விஷயமா என கேலி கிண்டல்கள் செய்தும் சூர்யா இதில் உறுதியாக இருக்கிறார். இதுகுறித்த முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட அவருக்கு தொழிலதிபர் ஒருவரிடம் பார்ட்னர்ஷிப் வைத்துக்கொள்ள பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

ஆனால் அந்த தொழிலதிபர் சூர்யாவை நிராகரிக்க அதன் பின்னர் வேறொரு தொழிலதிபர் தான் உதவுவதாக கூறி சூர்யாவை நம்ப வைத்து ஏமாற்றி வருகிறார்.

இதனால் கடும் நிதி நெருக்கடிக்கு தள்ளப்படும் சூர்யா தன்னுடைய மனைவி அபர்ணா பாலமுரளி, தன்னுடைய கிராம மக்கள் உதவியோடு மீண்டும் எப்படி அந்த ஏமாற்றத்தில் இருந்து மீண்டு எழுகிறார். தனக்கென ஒரு தனியார் நிறுவனத்தை எப்படி உருவாக்குகிறார் என்பதுதான் இந்த படத்தின் மீதி கதை.

இந்தத் திரைப்படம் டெக்கான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை உருவாக்கிய ஜி ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் குறைந்த பட்ஜெட்டில் விமான சேவையை எப்படி தொடங்கினார் என்பதே இந்த படத்தின் கதை சுருக்கம்.

சூரரைப் போற்று படம் எப்படி இருக்கு?? சூர்யாவுக்கு ஒர்க் அவுட் ஆகுமா? - விமர்சனம் இதோ.!!

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

நடிகர் சூர்யாவின் நடிப்பு படத்தில் மிகவும் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சூர்யாவின் வெறித்தனமான நடிப்புக்கு தீனி போடும் படமாக சூரரைப்போற்று அமைந்துள்ளது.

அபர்ணா பாலமுரளியும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும் படத்தில் நடித்துள்ள கருணாஸ், ஊர்வசி, மோகன் பாபு, பாரேஸ் ரவால், விவேக் பிரசன்னா என படத்தில் நடித்துள்ள அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

தொழில்நுட்பம் :

இசை :

ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. பாடல்கள் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது. அதிலும் குறிப்பாக காட்டு பயலே, மண்ணுருண்ட போன்ற பாடல்கள் படத்தின் பெரிய ஹைலைட்.

ஒளிப்பதிவு :

நிக்கெத் பொம்மி ரெட்டி ( Niketh Bommireddy ) என்பவர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். காட்சிகள் ஒவ்வொன்றையும் அழகாக படமாக்கி படத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.

எடிட்டிங் :

சதீஷ் சூர்யா என்பவர் இந்த படத்திற்கு எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். படத்துக்கு என்னென்ன காட்சிகள் தேவை என்பதை அறிந்து திறம்பட எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார்.

இயக்கம் :

மணிரத்தினத்தின் உதவி இயக்குனரான சுதா கொங்கரா வித்தியாசமான கதைக் களத்தை கையில் எடுத்து அதனை சிறப்பான முறையில் இயக்கியுள்ளார். படத்தில் எமோஷனல், ஆக்சன், லவ் என அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளன.

தம்ப்ஸ் அப் :

  1. படத்தின் கதைக்களம்
  2. சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பு
  3. ஜிவி பிரகாஷின் இசை
  4. பாடல்கள்

தம்ப்ஸ் டவுன் :

  1. வழக்கமான லாஜிக்கல் தவறுகள்