Soorarai Potru in Sun Tv

சூர்யா ரசிகர்களுக்கு தரமான பொங்கல் ட்ரீட்டாக சன் டிவி நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Soorarai Potru in Sun Tv : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

கொரானா ஊரடங்கு காரணமாக சூரரைப்போற்று திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியிருந்தது.

இந்த நிலையில் தற்போது சன் டிவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பொங்கல் விருந்தாக அதாவது ஜனவரி 14 ஆம் தேதி மாலை ஆறு முப்பது மணிக்கு சூரரைப்போற்று திரைப்படம் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

https://twitter.com/SunTV/status/1347032725673267201?s=19