Soodhu Kavvum 2 Movie Update

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூதுகவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Soodhu Kavvum 2 Movie Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்று வருகின்றன.

அப்படி விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சூது கவ்வும். நலன் குமாரசாமி இயக்கியிருந்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த வருடமே பேச்சு அடிபட்டது.

இப்படியான நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக சத்யராஜ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.