அர்ஜுன்

அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிஹரன் மீ டூ புகார் அளித்திருந்ததை அடுத்து தற்போது தெலுங்கு நடிகையான சோனி செரிஸ்டா தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அர்ஜூன் தமிழில் நடித்து வரும் படம் “இருவர் ஒப்பந்தம்”. சமீர் தயாரித்து இயக்கி வருகிறார். இது தெலுங்கு கன்னட மொழிகளில் கான்ட்ராக்ட் எனும் பெயரில் தயாராகி வருகிறது.

இதில் சோனி செரிஸ்டா முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அர்ஜுன் சார் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 150-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 100-க்கும் மேற்பட்ட கலைஞர்களுடன் பணியாற்றியுள்ளார்.

அவர் தென்னிந்தியாவின் முக்கியமான நடிகர். நிஜமாகவே ஒரு ஜென்டில்மேன். தூய்மையானவர்.

மக்கள் மத்தியில் நிரந்தரமாக இடம் பிடித்திருக்கிறார்.நான் நடித்து வரும் இப்படத்தில் அவ்வளவு நாகரீகமாகவும் ஒரு வழி காட்டியாகவும் இருக்கிறார். எந்த அமைப்பாக இருந்தாலும் அதை தவறாக பயன்படுத்தக் கூடாது என்பது என் கருத்து என்கிறார் சோனி செரிஸ்டா .

அவர் மீது தவறான கருத்தை கூறுவது வருந்தத்தக்கது என கூறி அர்ஜுனுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here