Sonu Sood Emotional on Stage
Sonu Sood Emotional on Stage

செய்த உதவிக்கு கிடைத்த படித்தால் மேடையிலேயே கண் கலங்கி அழுதுள்ளார் சோனு சூட்.

Sonu Sood Emotional on Stage : பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சோனு சூட். இவர் தமிழில் சந்திரமுகி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

இந்த கொரானா ஊரடங்கு காலத்தில் புலம்பெயர்ந்து தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப உதவினார்.

மேலும் உழுவதற்கு காசில்லாமல் தன் இரண்டு மகள்களை வைத்து நிலத்தை உழுத ஆந்திர விவசாயிக்கு டிராக்டர் ஒன்றை பரிசாக அளித்தார்.

வயிற்றுப் பசிக்காக நடுரோட்டில் சிலம்பம் சுற்றிய பாட்டியை தற்காப்பு கலைகளை கற்றுத் தரும் பயிற்சியாளராக மாற்றினார். மேலும் தன்னுடைய பிறந்த நாளில் மூன்று லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்து தருவதாக அறிவித்தார்.

உன் மூஞ்சியெல்லாம் பார்க்க யார் வருவாங்க? விஜய் சேதுபதியை கேவலமாக பேசிய முன்னணி தயாரிப்பாளர்!

இந்த நிலையில் இவர் கபில் சர்மா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சியில் இவர் செய்த உதவிக்காக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உருக்கத்துடன் நன்றி கூறிய வீடியோக்களை ஒளிபரப்பினர்.

அந்த வீடியோவை பார்த்து சோனு சூட் மேடையிலேயே கண்கலங்கி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த கொரானா ஊரடங்கு சோனு சூட்டை ரியல் சூப்பர் ஸ்டாராக மாற்றி இருப்பதாக ரசிகர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

https://www.instagram.com/p/CDLorMHH2mL/?igshid=m5mivfpva53s