Sonia Agarwal About Vijay’s fan Base | Millions of fans will come to the shooting site every day to watch Vijay | Kollywood | Tamil Cinema | Madura

Sonia Agarwal About Vijay’s fan Base :

மதுர படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் விஜய்யை பார்ப்பதற்காகவே தினந்தோறும் படப்பிடிப்பு தளத்திற்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் வருவார்களாம்.

‘இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர்.
திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.

விஜய்யின் சர்கார் செய்த பிரம்மாண்ட சாதனை – தமிழிலே இதுதான் முதல்முறை!

தனது தந்தையின் கரம் பற்றி திரை துறையில் காலடி எடுத்து வைத்தாலும், அதன்பின் தனக்கான பாதையை தனது விடாமுயற்சியால், தானே அலங்கரித்து இன்று ஆளப்போறான் தமிழன் என எல்லைகளை கடந்து வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்.

இவர் அதிகம் வெளியில் தலைக்காட்ட மாட்டார். எவருடனும் அவ்வளவு எளிதில் சகஜமாக பேசிவிட மாட்டார். அப்படி இருக்க அவர் எப்போதும் வெளியே வந்தாலும் அவரை பார்க்க எண்ணிலடங்கா ரசிகர்கள் திரண்டுவிடுவார்கள்.

அப்படிதான் மதுர படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் விஜய்யை பார்ப்பதற்காகவே தினந்தோறும் படப்பிடிப்பு தளத்திற்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் வருவார்களாம்.

இந்த தகவலை மதுர படத்தில் விஜய்யுடன் நடித்த நடிகை சோனியா அகர்வால் அண்மையில் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.