சூர்யாவின் சூப்பர் ஹிட் பட வாய்ப்பை மிஸ் செய்து விட்டேன் என பேட்டியில் புலம்பியுள்ளார் பிரபல நடிகை.

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் ஒன்று கஜினி. இந்த படத்தில் அசின் மற்றும் நயன்தாரா என இரண்டு நாயகிகள் நடித்திருந்தனர்.

இந்த இருவரின் கதாபாத்திரங்களில் ஏதோ ஒன்றில் தான் நடிக்க இருந்ததாக சோனியா அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த இவர் கஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அந்த வாய்ப்பைப் மிஸ் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தேன் என்பதை அவர் தெளிவாக குறிப்பிடவில்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.