Sonia Agarwal About Kadhal Konden

செல்வராகவன் மற்றும் தனுஷிற்கு நன்றி கூறி சோனியா அகர்வால் பதிவிட்டுள்ளார்.

Sonia Agarwal About Kadhal Konden : தமிழ் சினிமாவில் 7ஜி ரெயின்போ காலனி, காதல் கொண்டேன் இப்பட சில படங்களில் நடித்து பிரபலமானவர் சோனியா அகர்வால்.

தனுஷுடன் இவர் நடித்திருந்த காதல்கொண்டேன் திரைப்படம் வெளியாகி 17 வருடங்கள் ஆகிவிட்டன. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடியது மட்டுமல்லாமல் அப்படம் குறித்த விசயங்களையும் ஷேர் செய்து வந்தனர்.

இதனையடுத்து காதல் கொண்டேன் படத்தில் நடித்திருந்த சோனியா அகர்வால் கடவுள் வசிக்கும் தமிழ்நாடு. செல்வராகவன், கஸ்தூரிராஜா ஆகியோருக்கு நன்றி.

ரசிகர்களை கவர்ந்த காதல் கொண்டேன் திரைப்படம் வெளியாகி 17 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த சிறப்பான படத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. தனுஷுக்கும் நன்றி.

தனுஷ் நடிகனாக வேண்டும் என நினைக்கவில்லை அவரின் ஆசை இதுதான் – பலருக்கும் தெரியாத உண்மையை உடைத்த தனுஷின் அக்கா!

தான் பார்த்த தமிழ் படங்களிலேயே எவற்றுடனும் ஒப்பிட முடியாத திரைப்படமாக காதல் கொண்டேன் திரைப்படம் அமைந்துள்ளது என கூறியுள்ளார்.

சோனியா அகர்வாலின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் இடையே லைக்ஸ் குவிந்து வருகின்றன. ஆனால் செல்வராகவன், தனுஷ் ஆகியோர் இந்தப் பதிவைப் செய்யவில்லை.

இயக்குநர் செல்வராகவன் சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.