பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சோமசேகர் நண்பருடன் போனில் தோத்துட்டேன் மச்சான் என பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
Som Sekhar Viral Video : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.
இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் சிறப்பாக நடந்து முடிந்தது. நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக அரியும் ரன்னர் ஆக பாலாஜியும் வென்றனர்.
சோம் சேகர் நான்காவது ரன்னர் ஆக வீட்டை விட்டு வெளியேறினார். இவர் பிக் பாஸ் வீட்டில் அமைதித் தூதுவர் ஆகவே இருந்து வருகிறார். ஆனால் அன்பு கேங்கில் ஐக்கியம் ஆனதால் மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்தார்.
இவர் மட்டும் தனியாக நின்று விளையாடி இருந்தால் நிச்சயம் ரன்னராகி இருப்பார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இப்படியான நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் தன்னுடைய நண்பருக்கு போன் போட்டு தோத்துட்டேன் மச்சான் என்ன சோம் சேகர் புன்னகையுடன் பேசியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.