Solutions For Leucorrhea :
Solutions For Leucorrhea :

Solutions For Leucorrhea :

பெண்களுக்கு வரக்கூடிய பல நோய்களில் வெள்ளைப்படுதலும் ஒன்றாகும். பெண்களின் பிறப்புறுப்பின் வழியே ‘சளி’ போன்ற வெண்ணிறக் கசிவு வெளியேறுவதை வெள்ளைப்படுதல் நோய் (Leucorrhea) என்கிறோம். இதை வெள்ளைப்போக்கு, வெட்டை என்று சொல்வார்கள்.

இதை கவனிக்காமல் விட்டு விட்டால் இனவிருத்தி உறுப்புகளின் ஒரு பகுதியையோ அல்லது பல பகுதியையோ பாதித்து, தீவிரமான நோய்களுக்கு அடிப்படையாக மாறி விடும். கர்ப்பப்பை எடுக்க கூடிய சூழ்நிலை உண்டாகும்.

பெண்களின் வெள்ளைப்படுதல் நோய்க்கான தீர்வு:

* காசினிக் கீரையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட வெள்ளைப்படுதல் குறையும்.

* ஒரு ஸ்பூன் வெந்தயத்தைத் தண்ணீர் ஊற்றி இரவு முழுக்க ஊறவைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அந்த தண்ணீரை வடிகட்டி, ஒரு ஸ்பூன் தேன் கலந்து, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

*பாலக் கீரை, சீரகம், பூண்டு அரைத்து சாப்பிட வெள்ளைப்படுதல் குறையும்.

* சுக்காங்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் குறையும்.

* மணத்தக்காளி இலைகளை எடுத்து அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு பல், சீரகம், மிளகுத்தூள்,கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து சூப் போல செய்து அடிக்கடி குடித்து வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குறையும்.

* நெல்லிக்காய் பொடி பனங்கற்கண்டு இரண்டையும் பசும் பாலில் போட்டு அதனுடன் நாட்டுக் கோழிமுட்டை வெண்கருவை போட்டு கலக்கிக் சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் குறையும்.

* பூசணிக்காயை எடுத்து தோல் சீவி அதன் சதையை அரைத்து நன்கு பிழிந்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குறையும்.

* அருகம்புல்லை எடுத்து நன்றாக வெட்டி நீர் விட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி அதில் சிறிது மிளகுத்தூள் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை குடித்து வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குறையும்.

* நெல்லிக்காய் வற்றல் மற்றும் அதிமதுரம் ஆகியவற்றை எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி அதனுடன் தேனை கலந்து லேகியம் போல செய்து பாலுடன் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here