Solutions For cough :
Solutions For cough :

Solutions For cough :

● இருமல் குணமாக சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.

● ஓமவல்லி இலை, காம்பு கஷாயம் செய்து குடிக்க இருமல் சளி காய்ச்சல் குணமாகும்.

● முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனே நிற்கும்.

● அதிமதுரப் பொடி தொண்டை கரகரப்பு ,இருமல் ,மூலம், நரம்பு தளர்ச்சி போன்றவற்றிற்கு மிக சிறந்த ஒன்று இதனை 1 அல்லது 2 கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டுவர வேண்டும்.

● இருமலால் தூக்கம் வராமல் இருந்தால் வெங்காயம் உப்பு தண்ணீரில் வேக வைத்து இரவு சாப்பிட்டு வந்தால் தூக்கம் வரும்.

● திருநீற்றுப்பச்சிலைச் சாற்றை தேனில் கலந்து குடித்துவர மேல் சுவாசம் மற்றும் இருமல் தீரும்.

● மாதுளம்பூ பொடியுடன், பனங்கற்கண்டு சேர்த்து காலை ,மாலை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.

● இஞ்சிச்சாறு, மாதுளம் பழச்சாறு இவற்றை தேன் கலந்து குடிக்கலாம்.

● மிளகு, திப்பிலி, சுக்கு இவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் அளவு தேனில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் மற்றும் தொண்டை வலி குணமாகும்.

● இருமல் குறைய இஞ்சி மற்றும் சித்தரத்தை சேர்த்து இடித்து கஷாயமாக குடிப்பதன் மூலமாக இருமல் குறையும்.

● எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து குடிக்க இருமல் குறையும்.

● மிளகுத் தூளை தேனில் கலந்து சாப்பிட இருமல் குறையும்.

● நெல்லிக்காய், ஊறுகாய், ரோஜா இதழ்கள் இவற்றை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட இருமல் குறையும்.

● இருமல் போக துளசி இலை சாறு 2 ஸ்பூன் குடிக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here