Solutions for asthmatic :
Solutions for asthmatic :

Solutions for asthmatic :

நீங்கள் ஆஸ்துமாவினால் அவதிப்படுபவரா? ஆஸ்துமாவிற்கு முடிவுகட்டும் தீர்வுகள்:

பனிக்காலத்தில் ஏற்படுகிற நோய்களில் ஆஸ்துமாவுக்கு முக்கிய இடமுண்டு.
அடிக்கடி சளி பிடிப்பது, அடுக்குத் தும்மல், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, வறட்டு இருமல் போன்றவற்றுக்கு முறையாக சிகிச்சை எடுக்காதபட்சத்தில் இவை ஆஸ்துமாவுக்கு வழி அமைத்துவிடும்.

ஆஸ்துமா என்பது நுரையீரலில் ஏற்படும் நாட்பட்ட அழற்சியினால் மீண்டும் மீண்டும் வரக்கூடிய மூச்சு விடுதலில் சிரமத்தைக் கொடுக்கும் மூச்சுத்திணறல் நிலை ஆகும்.

ஆஸ்துமா குறைவதற்கான தீர்வுகள்;

* சுண்டைக்காயை உப்பு நீரில் ஊறவைத்து, காய வைத்து, வறுத்து சாப்பிட ஆஸ்துமா, மார்புச் சளி தீரும்.

* நொச்சி இலை, மிளகு, லவங்கம், பூண்டு மென்று முழுங்கலாம்.

* மூன்று வில்வ இலைகளோடு இரண்டு மிளகைச் சேர்த்து வெறும் வயிற்றில் நாற்பது நாட்கள் மென்று சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குறையும்.

* ஆரஞ்சுப் பழச்சாறு, அன்னாசிப் பழச்சாறு இரண்டையும் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோய் குறையும்.

* ஆஸ்துமா உள்ளவர்கள் தினமும் இரவு வறுத்த கொண்டைக்கடலை சிலவற்றை சாப்பிட்டு வெதுவெதுப்பான பால் குடித்து வந்தால் மிகவும் சிறந்தது.

* இந்துப்பை பொடி செய்து கடுகு எண்ணெயில் போட்டு நன்றாக கலந்து அந்த எண்ணெயை மார்பு பகுதியில் தடவி வந்தால் ஆஸ்துமா குறையும்.

* அருநெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குறையும்.

* வெங்காயச்சாறு, கற்றாழைச்சாறு, இஞ்சிச்சாறு எடுத்து அதனுடன் சுத்தமான தேன் சேர்த்து நன்றாக கலந்து குடித்து வந்தால் ஆஸ்துமா குறையும்.

* முசுமுசுக்கையை சூரணமாக உட்கொள்ள ஆஸ்துமா குறையும்.

* தூதுவளை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு கரண்டி சாறுடன், அரைக்கரண்டி தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் ஒரு மாதம் அருந்தி வந்தால் ஆஸ்துமா குறையும்.

* கற்பூரவள்ளி சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்து அருந்திவந்தால் ஆஸ்துமா குறையும்.

* மிளகை மோர், வெற்றிலைச்சாறில் ஊறவைத்து காயவைத்து பொடி செய்து தேனில் காலை, மாலை சாப்பிட ஆஸ்துமா குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here