Solutions For Acne :
Solutions For Acne

Solutions For Acne :

முகப்பரு மறைந்து பால் போன்ற அழகான முகம் பெற வேண்டுமா? இதோ டிப்ஸ்

♧ சின்ன வெங்காயத்தை எடுத்து பாலில் வேக வைத்து மையாக அரைத்து பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் குறையும்.

♧ கடலைமாவு, வெந்தயம் தேய்த்து வந்தால் பருக்கள் குறையும்.

♧ முட்டை கோஸ், தக்காளி, கேரட் இவற்றை பச்சையாக சாப்பிட்டு வந்தால் பருக்கள் போகும்.

♧ தினமும் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 5 முதல் 10 நிமிடம் ஊற வைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

♧ ரோஸ் வாட்டரில் எலுமிச்சை சாறு கலந்து 30 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ பரு மறைந்து போகும்.

♧ எலுமிச்சை சாற்றை காட்டனில் நனைத்து பரு உள்ள இடத்தில் வைத்தால் பருக்களில் உள்ள கிருமிகள் அழிந்து போகும். இதனால் அவை நாளடைவில் மறைந்து போகும்.

♧ படிகாரத்தை நீரில் கரைத்து அந்த நீரில் முகத்தை கழுவி வந்தால் முகப்பரு நீங்கும்.

♧ வேப்பிலை கொழுந்தை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் போட்டு 10 முதல் 15 நிமிடம் ஊற வைத்து பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவி வர பருக்கள் மறையும்.

♧ தேனுடன் சிறிது லவங்க பட்டையின் தூளை சேர்த்து முகப்பரு உள்ள இடத்தில் தடவி வர பருக்கள் மறையும்.

♧ தக்காளி சாற்றினை முகத்தில் தடவி வர பருக்கள் மறையும்.

♧ காய்ச்சாத பாலினால் முகம் கழுவி வர பருக்கள் இல்லாத பொலிவான முகத்தைப் பெறலாம்.

♧ முட்டையின் வெள்ளை கருவை பருக்கள் மீது போட பருக்கள் மறையும்.

♧ முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவி, மாய்ஸ்சுரைசர் தடவியபின் ஸ்ரீதர் பேஸ்ட்டை பரு உள்ள இடத்தில் வைத்தால் பரு மறையும்.

சிலருக்கு அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சிறிதளவு டூத்பேஸ்ட்டை ஏதேனும் ஒரு பருவின் மீது தடவி ஏதேனும் எதிர்வினை ஏற்படுகின்றதா என்று பார்த்த பின்னர் இந்த குறிப்பை பயன்படுத்தவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here