Solution for Epileptic
Solution for Epileptic

Solution for Epileptic :

தினமும் மூன்று வேளை வாழைப்பழம் சாப்பிட்டு வர வலிப்பு வருவது குறையும்.

(1) அரை டம்ளர் பாலில்,அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி , அதில் 5 அல்லது 6 பூண்டு பற்களை சேர்த்து,வேகவைத்து தினமும் குடித்து வர, கை கால் வலிப்பு குணமாகும்.

(2) வெள்ளை வெங்காயத்தை தட்டிச்சாறு பிழிந்து வலிப்பு வந்தவரின் காதில் 2 அல்லது 3 சொட்டு விட்டால் காக்காய் வலிப்பு அடங்கிவிடும்.

(3) அண்டத்தைலம்(சித்தமருத்துவ கடைகளில் கிடைக்கும்) 10 துளி தினம் 2 வேளை நாவில் தடவ வலிப்பு தீரும்.

(4) வெள்ளை பூசணிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள, திடீர் திடீர் என்று ஏற்படும் வலிப்பு நோய்களையும் குணமாக்கும்.

(5) பிரமி நெய் 5-10 மிலி ,5-10 மிலி பாலில் தினமும் 2 வேளை பருகிவர வலிப்பு குணமாகும்.

(6) தேங்காய் எண்ணையை அடிக்கடி குடித்து வர வலிப்பு குணமாகும். தினமும் துளசி இலையை வாயில் போட்டு மென்று விழுங்கி வந்தால் நரம்பு மற்றும் முளை வலிமையாகி, அடிக்கடி கை,கால் வலிப்பு வருவது குறையும்.

(7) ஒரு கைப்பிடி அருகம்புல், மிளகு 25, இடித்து 4ல் ஒன்றாய்க் காய்ச்சி வடித்து, காலை மாலை 250மிலி பருகிவர வலிப்பு குணமாகும் .

(8) தினமும் மூன்று வேளை வாழைப்பழம் சாப்பிட்டு வர, வலிப்பு வருவது குறையும். ஏனெனில் இதிலுள்ள பொட்டாசியம் இரத்தம் உறைதலை கட்டுப்படுத்துகிறது. இதனால் மூளைக்கு செல்லும் இரத்தம் சிராகிறது. இதனால் வலிப்பு வருவது தடைபடுகிறது.

(9) அகத்திக்கீரை, மிளகு, பசுவின் கோமியம் ஆகிய மூன்றையும் சேர்த்து அரைத்து அடைபோல் தட்டி காயவைத்து தூளாக்கி பொடிசெய்து நசியவிட (மூக்கில் உறிஞ்சு) வலிப்பு நோய் படிப்படியாக குறையும்.

(10) அரைக்கீரையுடன் சுக்கு, இஞ்சி, மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் குளிர் சன்னி, வலிப்பு நோய் போன்றவை குணமாகும்.

(11) மாங்கொட்டைக்குள் இருக்கும் பருப்பை வேகவைத்து சாப்பிட்டால் வலிப்பு, கோடைகாலத்தில் ஏற்படும் உஷ்ணபிணிகள் போன்றவை தீரும்.

(12) கொய்யா தளிர் இலைச் சாறு பருகிவர காய்ச்சல்,காக்கா வலிப்பு குணமாகும்.

(13) முருங்கை பட்டையை நீர்விட்டு அவித்துச் சாறெடுத்து ரசமாக்கி உணவுடன் சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

(14) இரண்டு கிராம் பொரித்த பெருவெங்காயத்தை பனை வெல்லத்தில் பொதித்து உண்டுவர சன்னி, வலிப்பு ஆகியவை தீர்ந்துவிடும்.

(15) தும்பை இலையை கசக்கி பிழிந்து துளி மூக்கில் விடவும், இரண்டு மூன்று தரம் விட்டுவர காக்காய் வலிப்பு நோய் குணமாகிவிடும்.

(16) திராட்சை பழச்சாற்றை தினம் மூன்று வேளையும் இரண்டு தேக்கரண்டி அளவு கொடுத்து வர குழந்தைகளின் வலிப்பு நோய் தீர்ந்து விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here