Solution for Abdominal worms :
Solution for Abdominal worms :

Solution for Abdominal worms :

குழந்தைகளை பாதிக்கக்கூடிய ஒரு முக்கியமான பிரச்னை குடற்புழுத் தொல்லை. குழந்தை சரியாகச் சாப்பிடாமல் வயிற்றுவலியால் அவதிப்பட்டால், குழந்தைக்குக் குடல்புழு பாதிப்பு இருக்கலாம்.

● வயிற்றுப் பூச்சிகள் ஏற்பட காரணங்கள்:

* அசுத்தமான இடங்களிலும், மண் தரையிலும், தண்ணீரிலும் விளையாடுவது, அழுக்கடைந்த பொம்மைகளுடன் விளையாடுவது, குழந்தைகளும் பெரியவர்களும் காலில் செருப்பு அணியாமல் நடப்பது.

உணவு சாப்பிடுவதற்கு முன் கைகளைக் கழுவிச் சுத்தப்படுத்தத் தவறுவது, சமையலுக்கு முன் காய்கறிகளைக் கழுவிச் சுத்தம் செய்யத் தவறுவது போன்ற சுகாதாரமற்ற பழக்கங்களே குடற்புழு ஏற்படுவதற்குக் காரணமாகின்றன.

● வீட்டு வைத்தியம்:

* நிலவேம்பு இலையை கஷாயமாக்கி தொடர்ந்து அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் குறையும்.

* பிரண்டை இலையுடன், வேப்பிலை, மிளகு சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றுப் புழுக்கள் குறையும்.

* பெரியவர்களுக்கு ஒரு ஸ்பூன் பப்பாளி விதை, சிறியவர்களுக்கு அரை ஸ்பூன் பப்பாளி விதையை எடுத்து நீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டி, தேன் சேர்த்து வாரம் ஒரு முறை என 4 வாரங்கள் குடித்துவர வயிற்று புழுக்கள் வெளியேறும்.

* அரை ஸ்பூன் நெய் காய்ந்ததும் வேப்பம் பூவை சேர்த்து வதக்கி நீர் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க வைத்து, வடிக்கட்டி,மாதம் ஒருறை குடித்துவர குடலில் புழுக்கள் வராமல் இருக்கும்.

* வேப்பிலைக் கொழுந்துடன் சிறிது உப்பைச் சேர்த்து மையாக அரைத்து, சுண்டைக்காய் அளவு உருண்டைகளாக்கி, இரண்டு உருண்டைகளை (ஒரு குழந்தைக்கு) வெறும் வயிற்றில் சாப்பிடச் செய்யவும் பூச்சிகள் செத்து வெளியில் வந்துவிடும்.

* துளசிச் சாற்றுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்து வரவும். தினமும் சில இலைகளை மென்று வந்தாலே புழுக்கள் வெளியேறும்.

* யானைத்திப்பிலியை பொடித்து தேனுடன் குழப்பி சாப்பிட்டுவர வயிற்றுப்புழுக்கள் குறையும்.

* இலவங்கப்பட்டை வாரத்தில் இருமுறை உணவுடன் பயன்படுத்தி வர வயிற்றுப்பூச்சிகள் ஒழியும். தாது விருத்தியாகும்.

* பப்பாளிப் பாலை விளக்கெண்ணை கலந்து குடித்து வர வயிற்றுப்பூச்சிகள் நீங்கும்.

* அன்னாசிப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்றிலுள்ள பூச்சிகள் குறையும்.

* அகத்திக் கீரையை வேக வைத்து அந்த நீரை வடித்து 200 மி. லி எடுத்து, அதில் சிறிது பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் மலம் கழிந்து வயிற்றுப் பூச்சிகள் குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here