சினேகன், கன்னிகா குட் நியூஸ் சொல்ல ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திரைப்படப் பாடல் ஆசிரியர், கவிஞர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் சினேகன். இவர் தமிழ் சினிமாவில் யோகி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
சாமி ,கோவில், ராம் பருத்திவீரன், மன்மதன், பகவதி, பாண்டவர் பூமி போன்ற பல படங்களுக்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
இவர் நடிகை கன்னிகா ரவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் கிராமத்தில் விவசாயம் செய்வது மரம் நடுவது என சந்தோஷமான வாழ்க்கையை ஒரு கூட்டுக் குடும்பத்துடன் வாழ்ந்து வந்ததை அடிக்கடி வீடியோவை வெளியிட்டு வந்தனர். இவர்களுக்கென தனி ரசிகர்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும்.
இப்படியான நிலையில் இவர்கள் நாங்க அம்மா அப்பா ஆகப் போறோம் உங்கள் எல்லோருடைய அன்பும் வாழ்த்தும் வேண்டும் என்று புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.