நீச்சல் குளத்தில் சினேகா

நடிகை சினேகா மகனுடன் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சினேகா. 1990களில் அஜித் விஜய் சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் சினேகா.

அதன் பின்னர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் சிறிது காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார்.

வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன் அக்காவாக நடித்த சினேகா பட்டாஸ் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மகனுடன் நீச்சல் குளத்தில் சினேகா.. வெளியான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அடிக்கும் கமெண்ட்ஸ்.!!

பட்டாசு திரைப்படத்தை தொடர்ந்து சினேகாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதனால் அவர் மீண்டும் ஓய்வில் இருந்து வருகிறார்.

இப்படியான நிலையில் நடிகை ஸ்னேகா தன்னுடைய மகனுடன் நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சினேகாவின் மகன் அப்படியே அச்சு அசலாக பிரசன்னா போலவே இருப்பதாகவும் அவரை மினி பிரசன்னா எனவும் கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.