நடிகர் பிரசன்னா சினேகாவின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sneha Prasanna Old Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சினேகா. அஜித் விஜய் சூர்யா என பல நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிய சினேகா இறுதியாக தனுஷுக்கு ஜோடியாக பட்டாசு படத்தில் நடித்துள்ளார்.

இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகி விட்ட நிலையிலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இதை நிலையில் தற்போது இவர்களின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.