Sneha Daughter Birthday Celebration

நடிகை சினேகா மகளின் முதல் பிறந்தநாள் விழாவை கொண்டாடி இணையத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Sneha Daughter Birthday Celebration : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சினேகா. இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் ஆனந்தம், புன்னகை தேசம், பார்த்திபன் கனவு, நான் அவன் இல்லை, பிரிவோம் சந்திப்போம் என பல தமிழ் படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

இந்நிலையில் இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு விஹான் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது.

ஆனால் சமீபத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஆத்யந்தா என்று பெயர் வைத்துள்ளனர்.

தற்போது குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகி குழந்தையின் பிறந்த நாளை நடிகை சினேகாவும் பிரசன்னாவும் கொண்டாடி வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது மட்டுமல்லாமல், ரசிகர்களிடமிருந்து வாழ்த்துக்களையும் குவித்த வண்ணம் உள்ளன.