சினேகா பிரசன்னா விவாகரத்து பெற இருப்பதாக வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திரையுலகம் என்றாலே பிரபலங்கள் பலர் எளிதாக விவாகரத்து செய்வது மறுமணம் செய்வது போன்ற விஷயங்கள் சர்வ சாதாரணமான ஒன்றாக இருந்து வருகிறது. பெரும்பாலான பிரபலங்கள் விவாகரத்து வாங்கி மறுமணம் செய்து கொண்ட விஷயங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

சினேகா, பிரசன்னா விவாகரத்தா? தீயாக பரவிய தகவலால் சினேகா செய்த வேலையை பாருங்க.!!

அப்படி இருந்தும் குறிப்பிட்ட சில பிரபலங்கள் ஒரே ஒரு திருமணம் மட்டுமே செய்து கொண்டு மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகின்றனர். அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ரஜினி போன்ற நடிகர்கள் எல்லாம் இதில் அடங்குவார்கள்.

இவர்களைப் போலவே நடிகர் பிரசன்னா சினேகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகள் பெற்றெடுத்து தற்போது வரை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சினேகா மற்றும் பிரசன்னா விவாகரத்து பெற்று பிரியப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவ ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சினேகா, பிரசன்னா விவாகரத்தா? தீயாக பரவிய தகவலால் சினேகா செய்த வேலையை பாருங்க.!!

இது முழுக்க முழுக்க வதந்தி என்பதை உறுதி செய்யும் வகையில் நடிகை சினேகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பிரசன்னாவை இறுக்கி அணைத்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.